International
பிரான்ஸ்

அவதானம் – தொடருந்துச் சேவைகளின் நேரமாற்றம்!!!

எதிர்வரும் டிசம்பர் 9ம் திகதி SNCF இன் தொடருந்துச் சேவைகளின் நேரங்கள், குளிர்கால நேரத்திற்கு மாற்றப்படுகின்றன.

பதினைந்தாயிரம் (15.000) தொடருந்துகள் இந்த நேர மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதில் 11.000 தொடருந்துகள் பயணிகள் தொடருந்துகளாகும்.

இந்தத் தொடருந்துகள் சாராசரி முப்பதாயிரம் (30.000) கிலோமீற்றர்கள், பிரான்சின் தொடருந்துச் சேவையில் பயணிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருந்துகளின் நேரமாற்றமானது, வருடத்திற்கு இரண்டு முறை, கோடைகால ஆரம்பத்திலும், குளிர்கால ஆரம்பத்திலும் நடைபெறுகின்றன.

தொடருந்து நிலையங்களின் புறப்பாட்டு அட்டவணைகள், மற்றும், இணையத்தளங்கள் ஆகியவற்றில், இந்த நேரமாற்றங்களை அவதானிக்குமாறு SNCF அறிவுறுத்தி உள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!