International
இலங்கை

இரண்டு மாதங்களில் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2018ம் வருடத்தின் முதல் இரண்டு மாதகாலப் பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களில் இவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டில் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். இவர்களில் 150 பேர் பெண்களாவர். அதே ​போன்று அந்த வருடத்தில் 19 வயதுக்குக் குறைவான 100 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தனர்.

அதற்கு முந்திய 2016ம் வருடத்தில் 877 பேர் நீரில் மூழ்கி மரணத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெண்கள் 177 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.

மேலும் 2016ம் ஆண்டு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் 105 பேர் 19 வயதுக்குக் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!