International
இலங்கை

இராணுவமுகாமை விரட்டும் இரணைமடுக்குளம்! பின்வாங்கும் இராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை நீடிப்பதால், குளங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இரணைமடு குளத்தின் நீர்மட்டமும் இன்று காலை 7 மணியளவில் 35.4 அடியாக காணப்படுகின்றது.

இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் காரணமாக நீர் ஏந்து பரப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரணைமடுவில் அமைந்துள்ள கிளிநொச்சி இராணுவத் தலமையகத்தின் சில பகுதிகள் இரணைமடு குளத்தின் கீழ் சென்றுள்ளது.

குறித்த குளத்தின் நீர் முகாமிற்குள் வராது படையினர் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் கோரிய போதும் நிலத்தை விட்டுக் கொடுக்காத இராணுவத்தினர் தற்போது இரணைமடுக்குளத்தால் பின் வாங்கி வருகின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!