International
ஆன்மீகம்

எந்த விளக்கில் எந்த எண்ணெய் பயன்படுத்தி வழிபட்டால் என்ன நன்மை கிடைக்கும் என தெரியுமா?

வீட்டில் விளக்கேற்றி தெய்வத்தை வழிபடுவது நல்ல பலனை தரும். ஆனால் அந்த விளக்கின் அமைப்பை பொறுத்தும், விளக்கில் பயன்படுத்தக் கூடிய எண்ணெயை பொறுத்தும் பலன்கள் மாறும். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

விளக்கின் முகம்:-

  • ஒரு முகம் உள்ள விளக்கை ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.
  • இரண்டு முகம் கொண்ட விளக்கில் விளக்கு ஏற்றினால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
  • மூன்று முகம் கொண்ட விளக்கினை ஏற்றினால் புத்திரதோஷம் ஏதுவும் இருந்தால் நீங்கிவிடும்..
  • நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் வீட்டில் செல்வம் பெருகி நன்மை உண்டாகும்.
  • ஐந்து முகம் உள்ள விளக்கை ஏற்றினால் நல்லதே நடக்கும்.

எண்ணெயை தேர்ந்தெடுக்கும் முறை:

  • விநாயகருக்கு விளக்கு ஏற்ற நினைத்தால் தேங்காய் எண்ணெயால் விளக்கு ஏற்றினால் வேண்டிய காரியம் நடக்கும்.
  • நாராயணன் மற்றும் சர்வ தேவதைகளுக்கு விளக்கு ஏற்ற நினைத்தால் நல்லெண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்வதால் பீடை விலகுவதோடு, எமனை பற்றிய பயம் ஏற்படாமல் இருக்கும்.
  • மகாலட்சுமியை விளக்கு ஏற்றி வழிபடும் போது பசுநெய்யை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சகல செல்வமும் பெருகும்.
  • குலதெய்வம், பராசக்தி மற்றும் ருத்திரருக்கு விளக்கு ஏற்றும் போது வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம். இதை செய்வதால் குடும்பத்தில் விருத்தி ஏற்படும். விளக்கில் எக்காரணம் கொண்டும் கடலை எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!