International
ஆன்மீகம்

கோவில்களில் சாமி கும்பிடும் முறை பற்றி தெரியுமா?

எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் கோவிலில் முறையாக எப்படி வணங்க வேண்டும் என்றே தெரியாமல் இருப்பார்கள், இனி மேலும் அது தெரியாமல் இருக்காதீர்கள். இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிலினுள் நுழைந்த உடன் கொடி மரத்தை வழிபடுவார்கள். அதற்கு இறைவனே நான் உன்னை அடி பணிகிறேன் என்பதே ஆகும். இறைவனின் முன்னால் தலை குனிந்து வணங்குகிறோம். நம்முடைய ஆணவம், செருக்கு முதலிய தீய குணங்களை இங்கேயே விட்டுவிடுகிறேன் அதற்கு கைமாறாக நீ எனக்கு அருளை வழங்கு என்பதே இதன் தத்துவம்.

விநாயகப் பெருமானை வணங்கி சிறிதாக தோப்புக் கரணம் போட்டு உங்கள் வாழ்வு தடையின்றி சிறப்பாக அமையுமாறு வணங்க வேண்டும். அது மட்டுமில்லாமல் சிவன் ஆலயத்தில் முதலில் நந்தி தேவனையும், பெருமாள் கோயில்களில் நுழையும் போது கருடாழ்வாரையும் வணங்கி அவர்களின் அனுமதியை பெற்ற பின்னர் சிவனையோ அல்லது பெருமாளையே வணங்க செல்ல வேண்டும். தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் போன்றவற்றில் உங்களால் முடிந்தவற்றை கோவில்களில் கொடுத்து வணங்க வேண்டும்.

தீபாராதனை காட்டும் போது தீப ஜோதிக்கு இடையில் காட்சி தரும் மூலவரை ஒரு கண்ணால் பார்த்து கொண்டு பக்தியோடு ஒருமனதாக இறைவனை வணங்க வேண்டும். அதன் பின்னர் அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்கிவிட்டு, பின்னர் முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கி பிரகாரத்தையும், நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

கடைசியாக கொடி மரத்தின் முன்னர் வடக்கு பார்த்தவாறு விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு வழிபாட்டின் முடிவாக சிறிது நேரம் கீழே உட்கார்ந்து கண்ணை மூடியவாறு அமர்ந்து தியானம் செய்துவிட்டு இறைவனின் சிந்தனையுடன் கோவிலை விட்டு வெளியேற வேண்டும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!