International
ஆன்மீகம்

சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை குறைக்க எளிய பரிகாரங்கள்!!

சனிப் பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி காலத்தில் சனி பகவான் நம்மை ஒரு கை பார்த்து விடுவார். இந்த கால கட்டத்தில் எதை செய்தால் ஒழுங்காக  நடக்காது. இதற்கு சனி பகவானின் செயலே காரணம். இதில் இருந்து தப்பிக்க ஒரு சில பரிகாரங்கள் செய்தால் ஒரளவு நிம்மதியாக இருக்க முடியும்.

கஷ்டம் குறைய செய்ய வேண்டியவை:-

  • தினமும் சூரியன் உதிக்கும் நேரத்தில் தரிசித்து பின்னர் மூன்று முறை சூரியனுக்கு நல்லெண்ணெய் இடுவதாக நினைத்து பூமியில் ஊற்றலாம் பின்பு அந்த இடத்தில்மூன்று முறை நீர் ஊற்றலாம்.
  • தினமும் காகாத்திற்கு சாதம் வைக்கும் போது அதில் சிறிது நல்லெண்ணெய் மற்றும் கருப்பு எள்ளை கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி உணவாக வைக்கலாம். அதன் பின்னர் நாய்க்கு உணவிடலாம்.
  • உங்களால் முடிந்த நேரத்தில் சிவன் கோவில்களை சுத்தம் செய்வது நல்லது. வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் 8 மணி முதல் 9 மணிக்குள்ளாக அரச மரத்தடியில் இரும்பாலான விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.
  • கருப்பு எள்ளு, உளுந்து மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக்கி வைத்து எறும்புகளுக்கு தினமும் கொடுத்து வரலாம். இதன் மூலம் உங்கள் கஷ்டங்கள் நீங்கும்.
  • உணவில் அதிக அளவு மிளகினை சேர்த்து கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் காலை சாப்பிடுவதற்கு முன்னர் மூன்று கருப்பு மிளகை கடித்து சுவைத்து உண்ண வேண்டும்.
  • தினமும் இரவு தூங்கும் முன்னர் கை, கால்களின் நகங்களில் கடுகு அல்லது நல்லெண்ணெய் கொண்டு அழுத்தி தேய்த்து வரலாம்.
share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!