International
ஆன்மீகம்

வெள்ளெருக்கை பூஜைக்கு பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா?

வெள்ளெருக்கு செடிகள் பெரும்பாலும் தாமாகவே வளரக்கூடியவை. இதற்கு தண்ணீரோ வேறு எந்த உரமோ தேவையில்லை. மாறாக சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை முதன்மையாக முதன்மையாக கொண்டு வளரும் தன்மை பெற்றது. சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படுகிறது. மேலும் இந்த செடிகள் இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று நம்பப்படுகிறது.

வெள்ளெருக்கு செடியிலிருந்து கிடைக்கும் பட்டை மூலம் திரி செய்து விளக்கில் தீபம் ஏற்றி வந்தால் எல்லா விதமான எதிர்மறைகளும் விலகி விடும் என்பது நம்பிக்கை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசியும் இறைவன வழிபடலாம். இத செய்வதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது இந்த எருக்கம்பூ தான் என்று நாயன்மார்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். மேலும் வெள்ளெருக்கை தேவ மூலிகை என்றும் ஒரு சிலர் கூறுவார்கள். வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன் செடியை தான் தேர்வு செய்வார்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!