Mon. Nov 30th, 2020

பிரதோஷம் என்பது மாதம் இருமுறை வரக் கூடிய ஒன்று. அதாவது வளர்பிறையில் ஒன்றும், தேய்பிறையில் ஒன்றும் வரும். த்ரயோதசி நட்சத்திரத்தில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும் நேரத்தை பிரதோஷ காலம் என்று கூறுவர்.

விரதம் இருக்கும் முறை:-

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து குளிக்க வேண்டும். அன்று முழுவதும் விரதம் இருக்க வேண்டும். பின்னர் மாலையில் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அது மட்டுமில்லாமல் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருள்களினால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.

பாலினால் அபிஷேகம் செய்தால் நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

தயிரால் அபிஷேகம் செய்தால் பல வளமும் உண்டாகும்

தேனால் அபிஷேகம் செய்தால் இனிய சாரீரம் கிட்டும்

பழங்களினால் அபிஷேகம் செய்தால் விளைச்சல் பெருகும்

பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும்

நெய்யால் அபிஷேகம் செய்தால் முக்தி பேறு கிட்டும்

இளநீரால் அபிஷேகம் செய்வதன் மூலம் நல்ல மக்கள் பேறு கிட்டும்

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் மறையும்

எண்ணெயால் அபிஷேகம் செய்தால் சுகவாழ்வு கிடைக்கும்.

சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் சிறப்பான சக்திகள் பெறலாம்.

share

By Editor

error: Alert: Content is protected !!