Mon. Nov 30th, 2020

எல்லோரும் தங்கள் செல்வ வளத்தை அதிகரிக்க தங்களுக்கு விருப்பமான தெய்வத்தை வழிபடுவார்கள். அதில் குறிப்பாக சொல்லவேண்டுமானால் திருப்பதி, மகாலட்சுமி, குபேரன் ஆகிய மூவரும் தான் செல்வ வளத்தை அதிகரிக்க உதவும் தெய்வம் என அனைவரும் அறிந்த ஒன்று தான். ஒவ்வொரு கடவுளை வணங்கும் போதும் அதற்குரிய மந்திரத்தை சொல்லி வணங்கினால் முழு பலனையும் நாம் பெறலாம். இப்போது மகாலக்ஷ்மிக்கு உரிய மந்திரத்தை பற்றி பார்க்கலாம்.

மகாலக்ஷ்மி மந்திரத்தை சொல்லும் முறை:-

இந்த மகாலக்ஷ்மி மந்திரத்தை மிகவும் கவனமாக சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் உடலும்,  உள்ளமும் சுத்தமாக வைத்து கொண்டு பூஜை அறையில் உட்கார்ந்து, யாரிடமும் பேசாமல், கண்களை மூடிக்கொண்டு மகாலக்ஷ்மியை மனதில் நினைத்து  108 முறை சொல்லவேண்டும். மகாலக்ஷ்மிக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு,வீடு முழுவதும் சாம்பராணி, தூபம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி பின்பு கிழக்கு திசை நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்வது நல்ல பலனைத் தரும்.

“ஓம்,

ஸ்ரீம்,

ஹ்ரீம்,

க்லீம்,

மகாலக்ஷ்மி,மகாலக்ஷ்மி,

யேகி,யேகி,

சர்வ சௌபாகியமே

தேகி ஸ்வாஹா”

share

By Editor

error: Alert: Content is protected !!