Mon. Nov 30th, 2020

மேஷம் ராசியினருக்கு 2018 வருடம் நல்ல தொழில் முன்னேற்றங்களையும், பண வரவுகளையும், நல்ல பலன்களையும் கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகள் அஷ்ட சனி மற்றும் கோட்சார ரீதியில் கிரஹங்கள் சரியான நிலையில் இல்லாமல், நல்ல பலன்கள் எதுவும் நடக்காமல் இருந்தது. குரு பார்வை மேஷம்  ராசி மீது விழுவதால் இந்த ஆண்டு மேஷம் ராசியினர் அதிர்ஷ்டசாலி என்றே கூறலாம். மேஷம் ராசியினருக்கு நல்ல திருப்புமுனைகள், தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு பணவரவு இருக்கும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நல்ல அஸ்திவாரத்தை போட்டுக் கொள்ளலாம். சுய ஜாதகத்தில் தசைகளுக்கு ஏற்ப நன்றாக இருந்தால் குறைகள் தீர்ந்து நல்ல முன்னேற்றம் காணலாம்.

பொதுவான பலன்கள்:

மேஷம் ராசியினருக்கு வாக்கு ஸ்தானம் நன்றாக இருப்பதால் அனைவரையும் பேச்சாற்றல் மூலம் கவர்ந்து விடுவார்கள். இதுவரை நீங்கள் எடுத்த முயற்சி எதுவும் கை கூடவில்லை என்று துவண்டு போகாமல் மேலும் முயற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீடு கட்டுவது, புதிய மனை வாங்குவது, வேறு வீடு செல்வது எல்லாம் இந்த காலத்தில் செய்யலாம். பழைய வண்டியை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். இதுவரை படித்த படிப்புக்கு ஏற்றார் போல் வேலை இல்லாமல் மற்றும் குறைந்த சம்பளம் வேலை பார்த்தவர்களுக்கு மாற்றம் நிகழும். நல்ல நேரம் வரும் பொழுது  விடா முயற்சி செய்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.

பொது இடங்களில் நல்ல மதிப்பு, மரியாதை, செல்வம் சேர்க்கை போன்றவை உண்டாகும். உங்களுக்கு பணவரவு வந்தால் தான் சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தள்ளி போன வழிபாடுகள், பயணங்கள், கடவுள் பிராத்தனைகள் எல்லாம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேஷம் ராசியினருக்கு தந்தை வழி உறவுகள் சாதகமாக இருப்பதால் அவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

மேஷம் ராசியினர்களுக்கு புனித ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மகான்கள் வாழந்த இடம், ஜீவசமாதி, ஷீரடி, மந்திராலயம், குலதெய்வ வழிபாடு நன்மைகள் உண்டாகும். வேற்று மதம் சார்ந்தவர்களும் புனித யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

இதுவரை இருந்த தொல்லைகள் குறையும் மற்றும் வேலை சுமை குறையும். பணியாளர்களுக்கு நல்ல பதவி உயர்வு, சம்பளம் உயர்வு மற்றும் நினைத்தது எல்லாம் நடைபெறும் ஆண்டாக இருக்கிறது. ஆசிரியர், ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், விற்பனை துறை, கவுன்சிலிங் மற்றும் ஆலோசனை வழங்கும் தொழில்களில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நன்றாக இருக்கும்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

தொழில் ஸ்தானம் நன்றாக இருப்பதால் புதிய தொழில், வியாபாரம் விரிவு படுத்துவது, புதிய கிளைகள் தொடங்குவது என்று அமைத்து கொள்ளலாம். வியாபாரிகளுக்கு மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வசந்த காலம் என்றே கூறலாம். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான சூழ்நிலை இருப்பதால் முயற்சி செய்தால் நன்மைகள் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளியூர் சம்பந்தமான தொழில் போன்றவை நன்றாக இருக்கும். வருமானம் சீராக இருப்பதால் முதலீடு செய்து புதிய தொழில் அமைத்து கொள்ளும் நேரமாக இருக்கிறது.

பெண்கள்:

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் தடைகளின்றி நன்றாக இருக்கும். திருமணம் தாமதமானர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை அமையும். அலுவலகம் வீடு என்று மாறி மாறி வேலை சுமை இருந்தவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும் ஆண்டாக இருக்கப் போகிறது. நினைத்த படி வேலை மாற்றம், சம்பளம் உயர்வு கிடைக்கும்.

பெண்களுக்கு எல்லாம் வகையிலும் மாறுதல் ஏற்படும் வருடமாக இருக்கிறது. மாமியார் அல்லது தாயார் வீட்டின் சொத்தில் பங்கு கிடைக்கும். பெண்கள் சம்பந்தமான விடுதி, சிற்றுண்டி நடத்துபவர்கள், ஜவுளி வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம்.

மாணவ மாணவிகள்:

மாணவர்கள் நல்ல மனதில் பதிய வைத்து படிக்கும் ஆர்வம் ஏற்படும். கல்வி சாலையில் கவனம் சிதறாமல் நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை தரும். நீர்நிலைகளில் விளையாடும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விடாமுயற்சி மற்றும் கவனம் சிதறாமல் படித்தால் நல்ல நிறுவனங்களில் அழைப்பு வரும்.

உடல் நிலை:

கிரக நிலை சாதகமாக இருப்பதால் உற்சாகத்துடனும் மனத்தெளிவுடனும் காணப்படுவார்கள். ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் டிசம்பர் வரை ஒரு சில முதியவர்களுக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும். அவ்வப்பொழுது மூட்டுவலி, முதுகில் வலி வந்து போகும்.

share

By Editor

error: Alert: Content is protected !!