Mon. Nov 30th, 2020

ரிஷப ராசியினர் சோதனைகளை சாதனையாக்கும் திறன் படைத்தவர்கள். 2018  வருடம்  தடைகள் ஏற்பட்ட பிறகு காரியம் நடைபெறும். இந்த புத்தாண்டு செய்யும் முயற்சிகள் யாவும் நிதானமாக தான் நடைபெறும். மூன்றாம் இடத்து ராகு நல்ல பலன்கள் மற்றும் கேட்கும் இடத்தில் இருந்து உதவி கிடைக்க செய்வார். அதுவும் ராகு பிடித்தமான கடகத்தில் இருக்கும் பொழுது ரிஷப ராசியினருக்கு யோகத்தை அளிப்பார். யோகத்தை அளிக்கும் சனி எட்டாம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரம், பணவரவு மந்தமாக இருக்கும்.

பொதுவான பலன்கள்:

சனி பகவான் வீண் குழப்பம், அலைச்சல், தடை மற்றும் மந்தமான சூழ்நிலை ஏற்படுத்துவார். சொத்தை அடமானம் மற்றும் ஏதேனும் உயர்ந்த பொருட்களில் முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. எந்த சூழ்நிலையிலும் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தொழில் தொடங்குவது, கடன் வாங்குவது என்று இருக்காதீர்கள். பணம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பணம் கேட்கும் இடத்தில் கிடைக்காமல் போகும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசை படும் நேரமாக இருக்கும் என்பதால் நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்.

பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முப்பது வயதில் இருப்பவர்களுக்கு பண நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். பணம் எவ்வகையிலாவது கரைந்து போகும். பிறந்த ஜாதகத்தின் தசை வைத்து பலன்கள் மாறுபடலாம். மேலே கூறியது அனைத்தும் நடைபெறாமல் போகலாம்.

புதிய மனை, வீடு வாங்கும் முன் வில்லங்கம் மற்றும் வேற சட்ட சிக்கல் இருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். அவசர பட்டு வாங்கி விட்டு பிறகு சட்ட சிக்கலில் மாட்டி கொண்டு அதற்கு பணம் விரயம் மற்றும் அலைச்சல் ஏற்படும்.

ஒரு சிலருக்கு ரியல் எஸ்டேட் மூலம் மறைமுக பணவரவு வரும். வீடு கட்டும் துறை மற்றும் நிலம் வாங்கி விற்பது என்று இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. வீண் பேச்சு மற்றும் தேவையற்ற விவகாரங்களைத் தவர்த்திடுங்கள். ரிஷப ராசியினருக்கு குரு மாற்றத்திற்கு பிறகு நல்ல பணவரவு இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:

நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை மாற்றம், சம்பளம் உயர்வு, பதவி எல்லாம் காரணம் இல்லாமல் தள்ளி கொண்டே போகும். சக பணியாளர்களிடம் விட்டு கொடுத்து சுமுகமாக இருப்பது நன்மை அளிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் உங்கள் கடமை மற்றும் வேலைகளை கவனமாக நேரத்திற்கு செய்து முடியுங்கள்.

இப்பொழுது இருக்கின்ற வேலையை விட்டு வேறு வேலைக்கு செல்வத்திற்கு முன்பு அங்கு அதிகார பூர்வமாக ஆர்டர் வந்து விட்டதா என்று பாருங்கள். அவசர முடிவுகள் தவிர்த்து தீர யோசித்த பிறகு வேலை மாற்றம் செய்யுங்கள். இந்த அஷ்டம சனி உங்களுக்கு பாடத்தை கற்று கொடுப்பாரே தவிர தீமைகள் தர மாட்டார்.

வியாபாரம்/தொழிற்பிரிவினர்:

புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலமாக இருக்காது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிக கவனமாக இருப்பது நல்லது. கடினமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். புதிய கிளைகள் தொடங்குவது, வேறு இடத்திற்கு மாற்றுவது, புதிதாக வியாபாரம் செய்வது போன்றவற்றை சிறிது காலத்திற்கு பிறகு செய்யலாம்.  வியாபாரம் சுமாராக நடந்தாலும் நஷ்டம் எதுவும் ஏற்படாது. வியாபாரம் மற்றும் தொழில் பொறுத்தவரை வாடிக்கையாளரின் திறன் கொண்டு கடன் அளித்தால் பணம் திரும்ப பெறலாம். திடீரென்று வருபவர்களிடம் உஷாராக பழக்கம் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்யுங்கள்.

பெண்கள்:

உணவு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமாக கவனமாக பார்த்து கொள்ளுங்கள். பெண்கள் புதிய ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் இருப்பவர்களிடம் விட்டு கொடுத்து, சிறு சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும். குரு பெயர்ச்சியின் காரணமாக ஜூலை நான்காம் தேதி முதல் டிசம்பர் வரை வீட்டில் சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். எதிர்ப்பார்த்த தொகை கைக்கு வந்து கெட்டி மேளம் கொட்டுகின்ற நேரமாக அமையும்.

மாணவ மாணவிகள்:

ரிஷப ராசி மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பெற்றவர்கள் அவர்களின் நட்பு வட்டம் மற்றும் செல்போன் போன்றவற்றை கட்டுப்படுத்துங்கள். வீண் அரட்டை, கேளிக்கை என்று இல்லாமல் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு படித்து முன்னேறுவதற்கான வழிகளைக் காணுங்கள்.

உடல் நிலை:

உடல் நலனைப் பார்த்து கொள்ள வேண்டும். நேரத்திற்கு உணவு சாப்பிடுங்கள். வெளியில் சாப்பாடு பார்த்து ஆர்டர் செய்யுங்கள். அஜீரணம், வயறு சம்மந்தமான உபாதைகள் வரக்கூடும்.

share

By Editor

error: Alert: Content is protected !!