Mon. Nov 30th, 2020

பொதுவாக வெள்ளிக் கிழமை என்பது தெய்வத்திற்குரிய கிழமையாக இருக்கிறது. வாரத்தில் எந்த நாளில் சாமி கும்பிடவில்லை என்றாலும் வெள்ளிக் கிழமைகளில் சாமி கும்பிடுவது வழக்கம். வெள்ளிக் கிழமைகளில் சில காரியங்களை செய்தால் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். அதை இப்போது பார்க்கலாம்.

வெள்ளிக் கிழமைகளில் இதை செய்தால் அதிர்ஷ்டம் பெருகும்:-

  • கடைகளில் பெரும்பாலும் குபேர விளக்கு கிடைக்கிறது. வெள்ளிக் கிழமைகளில் தாமரை திரி வைத்து அதில் விளக்கேற்றி வந்தால் குபேர அருள் கிடைக்கும்.
  • வெள்ளிக் கிழமை சுக்கிர ஓலையில் தாமரை இதழ் கொண்டு மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து மந்திரம் கூறினால் செல்வம் பெருகும்.
  • வெள்ளிக் கிழமை மாலை வேளையில் வீடை சுத்தம் செய்து சாம்பிரானி புகையை வீடு முழுக்க புடிப்பதால் வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் விலகி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க முடியும்.
  • வெள்ளிக் கிழமைகளில் அரச மரத்தை 11 முறை சுற்றி வந்து அந்த மரத்தடியில் அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு 11 விளக்கு ஏற்றி வந்தால் பண வரவு அதிகரிக்கும்.
share

By Editor

error: Alert: Content is protected !!