விடியும் நாளை விடியும்
புது வானம் புலரும்
மலரும் நாளை மலரும்
தமிழீழம் மலரும்
நித்தம் நாமிங்கு
இரத்த நதியிலே
செத்து தொலைவது
சரி தானா
கத்தி தமிழினம்
கண்ணீர் கடலிலே
காலம் கழிப்பதும்
விதி தானா
அடிமையாய் இங்கு
பலகாலம் வாழ்ந்து
பயனேதும் உண்டோ தோழா
சிலகாலம் வாழ்ந்தாலும்
சீர்கொண்டு வாழ்வோம்
விடுதலைக்காக மாள்வோம்-நாம்
விடியலுக்காக சாவோம்
புலிகள் கொஞ்சம்
பதுங்கிக் கொண்டால்
நாய்களும் வந்து
நர்த்தனம் ஆடும்
நாளை நிலைமை
மாறும் போது
நாம் யாரென்று
உலகமே அறியும்
தமிழீழம் மலரும்
(கடலில் மிதந்தவன் தமிழன்
வானில் பறந்தவன் தமிழன்
தரையை ஆண்டவன் தமிழன் –நல்ல
தலைவனை பெற்றவன் தமிழன் )
நெஞ்சிலே நெருப்பு
எமக்கென்றும் இருக்கு
நெருங்காது மரணம்
கல்லறைப் பூக்கள்
கவிதைகள் பாடும்
மாவீரர் நினைவுகள்
மங்காது வாழும்
தமிழீழம் மலரும்
அக்கினி கீலங்கள்
அகிலம் உடைக்கும்
ஆகாயம் புகுந்து
மின்னல் வெடிக்கும்
இரத்த மழையில்
சிங்களம் தவிக்கும்
தமிழீழம் மலரும்
இன்றைய வீழ்ச்சியும்
நாளைய எளிர்ச்சியும்
சரித்திரம் சொல்லும்பாடம்.
நீறான சாம்பலைகிழித்து
மீண்டும் துளிர்ப்போம் நாங்கள்
பீனிக்ஸ் பறவைகள் தானே
பிரபஞ்சம் அறியும்
எத்தனை எத்தனை
மறவர்கள் தியாகம்
விடுதலை வேட்கையிலே
அத்தனை புனிதமும் காப்போம் –எம்
அன்னை தேசம் மீட்போம்
