International
ஆண்டு பலன் - 2018

கடகம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

கடகம் ராசியில் பிறந்தவர்கள் 2018ம்  வருடம்  எடுக்கும் முயற்சிகள் யாவும் படிப்படியாக முன்னேற்றம் காணும் நேரமாக இருக்கிறது. கடந்த ஆண்டு விட இந்த வருடம் சிறப்பான நற்பலன்களை தரும் வருடமாக இருக்கிறது. காரியத்தடை நீங்கும், கடன் தொல்லை தீரும், வழக்குகள் சாதகமான நிலையில் நல்ல முடிவுக்கு வரும். பண வரவு, பொருளாதாரம் சீராக இருக்கும். ஒரு சிலர்க்கு நிலையான வேலை, தொழில் செய்யும் அமைப்பு வரக்கூடும். சனி பகவான் மற்றும் குரு பெயர்ச்சி சாதகமாக உள்ளதால் சரியான பாதையில் உங்களை வழி நடத்தும். கடகம் ராசியினருக்கு நல்ல பெயர், புகழ் தரும் ஆண்டாக இருக்கிறது.

பொதுவான பலன்கள்:

கடந்த காலத்தில் பாடமாக வைத்து கொண்டு இந்த ஆண்டு நற்பலன்களை கொடுக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு மற்றும் அவர்களுடன் இருந்த மனக்கசப்பு, சலசலப்பு நீங்கும் வருடமாக இருக்கிறது. எதிரிகளின் தொல்லை அகலும், உங்கள் திறமைகள் வெளிப்படும் என்பதால் முயற்சி செய்து வெற்றியை பெறுவீர்கள். ஒரு சிலர்க்கு இந்த ஆண்டு ஏற்றம் இறக்கமாக அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும், தயங்காமல் வெளியூர் மாற்றம், பணியிடம் மாற்றம் போன்றவை ஏற்று கொள்ளுங்கள். யாரையும் புறம் பேசாதீர்கள்.

பொதுவாக ஆறாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு வெற்றிகள் கொடுப்பார். சொந்த வீடு இல்லாதவர்கள், வீடு மாற்றம், வாங்கும் அமைப்பு உண்டாகும். இதுவரை இனம் புரியாத பயம், மனக்குழப்பம் யாவும் நீங்கும். வேற்று மொழிக்காரர்கள்,பிற மதம் சேர்ந்தவர்கள் உங்கள் மேல் நேசமாக இருப்பவர்கள். அவர்களிடம் உதவி, நட்பு, ஆதாயம் அடைவீர்கள். ஒரு சிலர்க்கு வெளியூர் செல்லும் அமைப்பு வரக்கூடும்.

உத்தியோகஸ்தர்கள்

வேலை சுமை அதிகரிக்கும், கூடுதலாக பொறுப்புகள், வேலை மாற்றம், பதவி உயர்வு, சம்பளம் உயர்வு ஏற்படும் காலமாக இருக்கும். செய்யும் வேலையில் கவனமாக நேரத்திற்கு முடித்து விடுங்கள். அலட்சியம் காட்டாமல் சரியாக செய்து முடித்து கொடுத்து விடுங்கள். இரும்பு, அரசு, தனியார் துறை, எழுத்து துறை சார்ந்தவர்கள், பத்திரிகை, நடத்துபவர், கட்டிடத் தொழில் செய்பவர்கள் ஏற்றமான நிலையை பெறுவார்கள். பணப்பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிகையாக இருக்க வேண்டும்.

பொருத்தமில்லாமல் வேலை செய்கின்றோம் என்று இருப்பவர்களுக்கு தகுதியான வேலை அமையும். புதிதாக வேலை தேடுபவரும் நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். அரசு தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

சுயதொழில், வியாபாரம், கூட்டுத்தொழில் செய்பவர்கள் இதுவரை இருந்த மந்த நிலை விலகி தொழில் நல்லபடியாக நடைபெரும். கலைஞ்சர்கள், தொழில் அதிபர்களுக்கு இருந்து வந்த முட்டு கடைகள், காரியத்தடை நீங்கி நல்ல நேரம் என்றே கூறலாம். ஜூலை நான்காம் தேதி முதல் டிசம்பர் வரை பொருளாதார நிலையில் நன்றாகவும், தொழில் வளர்ச்சி, வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலர்க்கு உபரியாக வருமானம் வரக்கூடும். வேறு தொழில், வியாபாரம் செய்து கூடுதலாக பணம் ஈட்டுவீர்கள். எண்ணெய், இரும்பு, வஸ்திரம், விலை உயர்ந்த நகை வியாபாரம் சீராக கணிசமான லாபம் பெறக்கூடும்.

பெண்கள்

கடக ராசி பெண்கள் குடும்பத்தில் நல்ல பெயர், அவர் பேச்சுக்கு மரியாதை மற்றும் கருத்துகளை ஏற்று கொள்வார்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஆதரவு, உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமைகள் யாவும் வெளிப்படும், சம்பளம் உயர்வு, பதவி உயர்வு, மேல் அதிகாரி பாராட்டும் பெறுவீர்கள். கடகம் ராசி பெண்களுக்கு அவ்வப்பொழுது சிறு உடல் உபாதைகள் வரக்கூடும். மகன் அல்லது மகளுக்கு ஏற்ற மணவாழ்க்கை அமையும். தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்விக சொத்துகள், வெளியூர் பயணங்கள், தனவரவு ஏற்படும். குடும்பத்தில் கடன் அல்லது பணம் தட்டுப்பாடு சமாளிக்கும் அளவிற்கு நிலைமை மாறும். குழந்தைகள் சம்மந்தமாக செலவுகள் ஏற்படக்கூடும். அது சுப செலவாகவும், பராமரிப்பு செலவாகவும் இருக்கலாம்.

மாணவ மாணவிகள்

ஆசிரியர், பெற்றவர்களிடம் நற்பெயர் எடுப்பீர்கள். சுறுசுறுப்பு, படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். விளையாட்டு, போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் வாங்குவீர்கள். பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர்க்கு ஜூலை மாதம் பிறகு சோம்பல் அதிகரித்து படிப்பில் கவனம் சிதறும். பெற்றவர்கள் அரவணைத்து அவர்களை நல்வழியில் நடுத்தி செல்ல வேண்டும்.

உடல் நிலை:

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் படிப்படியாக நல்ல படியாக குணம் அடைவீர்கள். இதுவரை கட்டுப்படுத்த முடியாத மருத்துவ செலவுகள் கட்டுப்பாட்டிற்கு வந்து விடும். சுகாதாரமற்ற தின்பண்டங்கள் வாங்கி உடல் உபாதைகள் வரக்கூடும் என்பதால் அதனை தவிர்த்துவிடலாம். நடுத்தர வயது பெண்களுக்கு கர்ப்பம், வயறு சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும். அவ்வப்பொழுது மருத்தவ செலவு ஏற்படும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!