International
பிரான்ஸ்

கனேடிய பெண் மீது பாலியல் பலாத்காரம்! – இரண்டு காவல்துறையினருக்கு சிறை!!

கனேடிய சுற்றுலாப்பயணி ஒருவரை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக இரண்டு காவல்துறையினர் விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கனடாவில் இருந்து பரிசுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை பரிசின் Quai des Orfèvres பகுதியில் வைத்து குறித்த இரு அதிகாரிகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள ஐரிஸ் நாட்டு இரவு விடுதியில் இருந்து வெளியே வந்த பெண்ணை, காவல்துறையினர் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் படி தெரிவித்து கைது செய்து, அல்லது அழைத்துச் சென்று, நள்ளிரவு 1 மணி அளவில் விடுவித்துள்ளனர். அழைத்துச் சென்ற அதிகாரிகள் தன்னை பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக அவர் பின்னர் குறிப்பிட்டார்.

உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கட்டு, மரபணு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதில் குறித்த பெண் மது போதையில் நடனம் ஆடியதாகவும், தனது ஆடைகளை களைந்ததாகவும், அதை புகைப்படம் எடுக்கச்சொல்லி கோரியதாகவும் காவல்துறையினர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, இன்று ஜனவரி 14 ஆம் திகதி திங்கட்கிழமை இரு காவல்துறையினருக்கும் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். பெப்ரவரி 1 ஆம் திகதி அவர்களுக்கான தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இரு அதிகாரிகளுக்கும் 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!