International
ஆண்டு பலன் - 2018

கன்னி ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

கன்னி ராசியினர் 2018ம் வருடம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாகும். வருடம் முழுவதும் ராகு, குரு பகவான் நல்ல பலன்களை தருவார். கேதுவும் உங்கள் கடன், நோய், மறைமுக எதிரிகள் போன்றவற்றை அகற்றுவார். பதினோராம் இடத்து ராகு உங்களுக்கு நல்ல லாபம், பணவரவு தருவார். இது வரை உங்கள் வளர்ச்சிக்கு இருந்து வந்த தடை, முட்டுக்கட்டையாக இருந்தவர்கள், எதிர்ப்புகள், பொறாமை போன்றவற்றை விலகும். கன்னி ராசியினர் 2018 புத்தாண்டு திருப்புமுனை தரும் ஆண்டாக இருக்கும்.

பொதுவான பலன்கள்

கன்னி ராசியினர் அரசாங்கம் வழியில் உதவி, முதியவர் அல்லது பெரியவர் வழியில் லாபம் வரக்கூடும். பத்தாம் இடத்தை சனி பகவான் பார்ப்பதால் பணிபுரியும் இடத்தில் கோபம் அடையாமல் நிதானமாக செல்வது நன்மை தரும். வீண் அரட்டை, சோம்பல் என்று இல்லாமல் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் வரக்கூடும். யாரையும் மனதை புண்படுத்தும் படி பேசுவது, எடுத்தெறிஞ்சு நடப்பது என்று இல்லாமல் பொறுமையை கடைபிடியுங்கள்.

எல்லாம் தெரியும் என்ற தைரியம் அதிகமாக இருக்கும் என்பதால் எடுத்தெறிஞ்சு பேசாதீர்கள். யாருடன் தயவு இன்றி வாழ முடியும் என்று குடும்பத்தில் இருப்பவர்களை பகை வளர்த்து கொள்ளாதீர்கள்.

மூன்றாம் நபர் மூலம் குழப்பம் ஏற்பட்டு வீட்டில் இருப்பவர்கள் சண்டை, சச்சரவு என்று இருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். கணவன் மனைவி இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோசமாக குடும்ப வாழ்கை நடைபெறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அடையாளம் கண்டு அறிந்து உங்கள் தவறை திருத்தி கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

ராகு, கேது உங்களுக்கு வெளிமாநிலம், வெளியூர் பயணம், வேலை அமைத்து தருவார். அதன் மூலம் லாபம் மற்றும் அதிகம் பொருள் ஈட்டும் வாய்ப்பு வரக்கூடும். குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது அலுவலகத்தில் நற்பெயர், கவுரவம், படிப்படியாக வேலை உயர்வு, பதவி போன்றவை நிகழும்.

அதிகம் முயற்சி இல்லாமல் லாபம் மற்றும் வேலை சுமை இல்லாமல் இருப்பீர்கள். ஒரு சிலர்க்கு இதர வருமானம் வரக்கூடும். சனி பகவான் பத்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் எச்சரிக்கையுடன் பழகி வருவது நன்மை தரும். கடன் சுமை அதிகரித்தாலும் எவ்வகையில் யாவது கட்டி முடிப்பீர்கள்.

ஒரு சிலர்க்கு மேல் அதிகாரிகளுடன் , அலுவலகத்தில் நெருக்கடி தோன்றக்கூடும். வேலை மற்றம் அல்லது விடும் அளவிற்கு வந்து விடும். எதிலும் நிதானமாக, பொறுமையாக, இறை வழிபாடு செய்வதால் உங்களை நல்வழியில் கொண்டு செல்லும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

வியாபாரம், தொழில் செய்பவர்கள் நினைத்தபடி தொழில் விரிவாக்கம், பொருட்கள் வாங்குவதற்கு பணம் கிடைக்கும்.இதுவரை வியாபாரத்தில், சிறு தொழில் செய்பவர்கள் தேக்க நிலை இருந்தவர்களின் நிலை மாரி சூடு பிடிக்க தொடங்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் லாபம் பெருகும். கூட்டுத்தொழில், பங்குதாரர் இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து நல்ல விதமாக தொழில் நடைபெறும். உங்களுக்கு நிகழும் மாற்றங்கள் திருப்புமுனை தரும்.

தொழிலதிபர்கள் அரசாங்க உதவி கிடைக்கும், மேலும் தடை மற்றும் முற்றுக்கட்டை விலகும். வயதில் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டாகும்.

பெண்கள்

கன்னி ராசி பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயர், பொருளாதாரம் முன்னேற்றம் காணப்படும். உங்களின் ஆலோசனை மற்றும் கருத்துக்கு மதிப்பு கொடுப்பார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு, வேலை மாற்றம், சம்பளம் உயர்வு போன்றவை கிடைக்கும். அதிகாரிகள், உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வீடு மாறுவது, வாங்குவது, மனையில் முதலீடு செய்வது என்று இருப்பீர்கள். குறிப்பாக கன்னி ராசியினருக்கு கைகளில் பணவரவு சீராக இருக்கும். வாங்கி கணக்கில் பணம் சேரும் என்பதால் அதனை நிலையான வாய்ப்பு போட்டு வைத்து சேமியுங்கள்.

குடும்பத்தில் சுப காரியங்கள் அடுத்து அடுத்து நடைபெறும். குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருக்கும் பொழுது திருமணம், வீடு வாங்குவது, குழந்தை பாக்கியம், வாகனம் அமைப்பு அமைத்து கொடுப்பார். பூர்விக சொத்தில் இருந்து வந்த பிரச்சனை விலகி, உங்களுக்கு பங்கு கிடைக்கும்.

மாணவ மாணவிகள்

மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண், கல்வி பிரிவில் சேருவது, கல்லூரி கிடைக்கும். எதிர்பார்த்த மதிப்பெண் பெற்று உயர் கல்வி, பணி எல்லாம் கைகூடும் நேரம் வந்த விட்டது. படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். பெற்றவர்கள், ஆசிரியர்களின் பாராட்டு பெறுவீர்கள். எதிலும் சிறந்து விளங்கி உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை உண்டாக்குவீர்கள். சாதாரணமாக இருந்தவர்கள் போட்டி, விளையாட்டு, பேச்சு போட்டி கலந்து கொண்டு பரிசும் பெறுவீர்கள்.

உடல் நிலை

சனி பகவான் நான்காம் இடத்தில் கோட்சர ரீதியாக இருக்கும் பொழுது மனம் அழுத்தம், ரத்த கோளாறுகள், முதுகு தண்டு பிரச்சனைகள் ஏற்பட கூடும். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். எதிலும் அவசரமாக செயல் படாமல் நிதானமாக செயல் பட வேண்டும். சுவாச உபாதை, முகம், உறுப்பு கோளாறுகள், நரம்பு, போன்றவற்றை பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!