International
பிரான்ஸ்

காதலியை கொலை செய்த இராணுவ வீரன்! – விசாரணையின் கீழ்!!

தனது காதலியை கொலை செய்த வழக்கின் கீழ், 21 வயதுடைய இளம் இராணுவ வீரன் ஒருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் கடந்தவார ஞாயிற்றுக்கிழமை Saint-Thibault-des-Vignes ( Seine-et-Marne ) பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரை ஊடறுக்கு நெடுஞ்சாலை ஒன்றின் ஓரத்தில் இருந்து 20 வயதுடைய இளம் பெண் ஒருவரது சடலத்தை காவல்துறையினர் கடந்த வார புதன்கிழமை மீட்டிருந்தனர். இந்நிலையில், சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த அப்பிராந்திய காவல்துறையினர், கடந்த புதன்கிழமை 21 வயதுடைய இராணுவ வீரனை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் படி, குறித்த இளம் பெண் Tremblay-en-France (Seine-Saint-Denis ) நகரில் வைத்து இரும்பு கம்பி ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டு, அதன் பின்னரே Thibault-des-Vignes க்கு கொண்டுசெல்லப்பட்டு வீதியில் வீசப்பட்டிருந்தார். குறித்த பெண் இராணுவ வீரனின் முன்னாள் காதலி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!