International
மலேசியா

கிரேப் கார் ஓட்டுநர் போல் ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி!

ஜொகூர் பாரு,ஜன.10- கிரேப் ஓட்டுநர் போல ஏமாற்றி பெண் ஒருவரை காருக்குள் பலாத்காரம் செய்ய முற்பட்ட பாக்கிஸ்தானிய ஆடவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு 11 மணி அளவில் அவனை கைது செய்ததாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஷாஹுரிநைன் ஜாயிஸ் தெரிவித்தார்.

நேற்று முன்தினம், 23 வயது பெண்மணி ஒருவர், ஜொகூர் பாருவில் இருந்து லார்கின் செல்வதற்காக கைப்பேசி செயலி மூலமாக கிரேப் காருக்கு ‘புக்கிங்’ செய்திருக்கிறார். அச்சமயத்தில், அவ்வழியே வந்த கார் ஒன்றை தான் புக் செய்திருந்த கிரேப் கார் என்று நம்பி அவர் ஏறி இருக்கிறார்.

ஏறும் வரை அது தான் புக் செய்த கிரேர் கார் என்று அந்தப் பெண் உணரவில்லையாம். சம்பந்தப்பட்ட பாக்கிஸ்தானிய ஓட்டுநர் எங்கெங்கோ காரை செலுத்திக் கொண்டிருந்ததால் அப்பெண்ணுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

அவர் சந்தேகித்தது போலவே அந்த ஆடவன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டிருக்கிறான். எனினும், அவனிடமிருந்து தப்பித்தோடி வந்து விட்ட சம்பந்தப்பட்ட பெண் உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

அதையடுத்து, அந்த ஆடவனை போலீஸார் நேற்று கைது செய்திருக்கின்றனர்.

The post கிரேப் கார் ஓட்டுநர் போல் ஏமாற்றி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!