International
கனடா

குத்துச்சண்டை வீரரை கொலைசெய்தவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை

யூ.எப்.சி. குத்துச்சண்டை வீரர் ரையன் ஜிம்மோவை கொலைசெய்த குற்றத்திற்காக, எட்மண்டனைச் சேர்ந்த 26 வயதான ஒருவருக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எட்மண்டன் நீதிமன்றத்தால் நேற்று (திங்கட்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

தண்டனைக்காலம் நிறைவடைந்த பின்னர், மேலும் 8 வருடங்களுக்கு வாகனங்களை செலுத்தவும் தடைவிதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 26 வயதுடைய கெட்ஸ்செல் என்பவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் கெட்ஸ்செல் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் கெட்ஸ்செல்லின் வாகனமும் ஜிம்மோவின் வாகனமும் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்டது. இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாக ஜிம்மோவை கெட்ஸ்செல் தனது பிக்கப் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச்சென்றார். படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஜிம்மோ பின்னர் உயிரிழந்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!