International
மலேசியா

கேமரன்மலை: நின்று தோற்பதைவிட கைவிடுவது மேல்!- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்,ஜன.10- நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கேமரன் மலைத் தொகுதியின் எம்பி பதவியை மஇகா உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் இழந்து விட்டதால், அத்தொகுதியை மீண்டும் தக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையை கட்சி இழந்து விட்டது. அதன் காரணமாகவே அங்குப் போட்டியிடும் வாய்ப்பை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டோம் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“எங்கள் கட்சி வேட்பாளரைத்தான் கேமரன் மலையில் களமிறக்குவோம் என்று வரும் தேர்தல் அத்தொகுதியை ஒரேடியாக இழப்பது அறிவுடைமை கிடையாது” என அவர் குறிப்பிட்டார்.

ஜனவரி 26-ஆம் தேதி கேமரன் மலை தேர்தலில் தேசிய முன்னணி பூர்வக்குடி மக்களில் ஒருவரான ரம்லி முகமட் நோரை களமிறக்குவதாக இன்று அறிவித்துள்ளதை அடுத்து விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் அது குறித்து பேசினார்.

கடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டுள்ளதாக சிவராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதை அடுத்து அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து சிவராஜ் மேல்முறையீடு செய்யாததை அடுத்து கேமரன் மலை தொகுதி காலியானது. அதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிவராஜ் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

கேமரன் மலையில், வழி வழியாக தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர்தான் தேர்தலில் நிறுத்தப்படுவார். அதே போல் இம்முறையும் மஇகா வேட்பாளரைத்தான் களமிறக்குவதாக இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் கட்சியின் நன்மைக்காக வேட்பாளரை அம்னோவில் இருந்து தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டதாக விக்னேஸ்வரன் கூறினார்.

“கேமரன் மலை மண்ணின் மைந்தன், அதுவும் அம்மலைப் பிரதேசத்தில் அதிகம் வாழும் பூர்வக்குடி மக்களில் ஒருவர், அரச மலேசிய போலீஸ் படையில் உயர் அதிகாரியாக பணியாற்றி உயர்நெறியுடன் இருப்பவர் ரம்லி. அவரை களத்தில் இறக்கினால் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிந்தது. அதனால், விட்டுக் கொடுத்தோம்” என்றார் அவர்.

The post கேமரன்மலை: நின்று தோற்பதைவிட கைவிடுவது மேல்!- விக்னேஸ்வரன் appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!