International
மலேசியா

கேமரன் மலை: பேசவே வாய் திறக்காத தேமு வேட்பாளர்!

கேமரன் மலை,ஜன.12- கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் ரம்லி முகமட் நோரை செய்தியாளர்களிடம் பேச விடாமல், அவரது வாய்க்கு பூட்டுப் போடப்பட்டிருப்பது போல தெரிவதாக பேசப்படுகிறது.

ஏனெனில், இன்று வேட்பு மனு தாக்கலின்போது நடந்த செய்தியாளர் சந்திபில், ரம்பியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட சமயத்தில், அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹாசான் செய்தியாளர் சந்திப்பு முடிவுறுவதாக அறிவித்து விட்டார்.

இந்த இடைத்தேர்தலில் நிற்பது குறித்து ரம்லியின் கருத்தை கேட்டறியும் செய்தியாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

செய்தியாளர்கள் எது கேட்டாலும் ரம்லி தலையை மட்டுமே அசைத்தாரே தவிர வாய் திறந்து பேசவில்லை.

எனினும், செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்த ரம்லி வாக்காளர்களிடம் பேசி இருக்கிறார். தனக்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

The post கேமரன் மலை: பேசவே வாய் திறக்காத தேமு வேட்பாளர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!