International
மலேசியா

கேவியஸே MyPPP-இன் அதிகாரப்பூர்வமான தலைவர்!

கோலாலம்பூர்,ஜன.10- மைபிபிபி கட்சியின் அதிகாரப்பூர்வமான தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ்தான் என்று அக்கட்சியின் வழக்கறிஞர்களான குணசேகரனும், லிண்டாவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சங்களின் பதிவுத் துறையான ஆர்ஓஎஸ் கூட கேவியஸைதான் மைபிபிபியின் சட்டப்பூர்வமான தலைவராக அங்கீகரிப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காண்பித்துள்ளனர்.

இதனை சட்டப்பூர்வமாக நிரூபிக்கும்படியான போதிய ஆவணங்கள் தங்களுக்கு ஆதாரங்களாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே, மைபிபிபி தொடர்ந்து கேவியஸின் தலைமையில், தலைநகர், கம்போங் ஆத்தாப், ஜாலான் ரோத்தானிலுள்ள மைபிபிபி கட்சி தலைமையகத்தில்தான் செயல்படும். அங்குதான் கட்சியின் அனைத்து அதிகாரப்பூர்வ ஊடகச் சந்திப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மைபிபிபி, அல்லது தலைவர் சம்பந்தமாக எந்தத் தனிநபரோ அணியினரோ கட்சி தலைமையகத்திற்கு வெளியே பேசினால் அது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக இருக்காது என்று அவர்கள் நினைவுறுத்தியுள்ளனர்.

The post கேவியஸே MyPPP-இன் அதிகாரப்பூர்வமான தலைவர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!