International
மலேசியா

கேவியஸ் வலையில் சிக்கி விடாதீர்! -பக்காத்தானுக்கு மெக்லின் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன. 13- சர்ச்சைக்குரிய டான்ஶ்ரீ கேவியஸை நம்பி, அவரது வலையில் விழவேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பானை பிளவு பட்டிருக்கும் மைபிபிபியின் தலைவரான மெக்லின் டிகுரூஷ் எச்சரித்தார்.

சுயநலத்துடன் அவர் கூறும் அரசியல் பொய்கள் மற்றும் ஏமாற்றுகள் குறித்து குறித்து எச்சரித்து மெக்லின் டிகுருஷ் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மைபிபிபியின் தேசியத் தலைவர் என்று கேவியஸ் கூறிவரும் வேளையில் மெக்லினும் தம்மைத் தேசியத் தலைவர் என்று கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரன் மலை இடைத்தேர்தலில் தாம் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிப்பதாக கேவியஸ் நேற்று அறிவித்தார். பிரதமர் துன் மகாதீர் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரைத் தாம் ஆதரிப்பதாக கேவியஸ் குறிப்பிட்டார்.

இதனிடையே கேமரன் மலையில் வாக்காளர்களைத் திரட்ட கேவியஸினால் முடியும் என்ற கூற்றை மெக்லின் நிராகரித்தார்.

அந்தத் தொகுதியில் தமக்கு வாக்களிக்கக் கூடிய 3,000 மைபிபிபி உறுப்பினர்கள் இருப்பதாக முன்பு கேவியஸ் கூறியிருந்தது உண்மையல்ல. கடந்த பொதுத்தேர்தலின் போது தாங்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி இதில் உண்மையில்லை என்று தெரிய வந்ததாக மெக்லின் குறிப்பிட்டார்.

கேமரன் மலைத் தொகுதியில் தாம் போட்டியிடப் போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த கேவியஸ், பின்னர் நேற்று நடந்த வேட்புமனுத் தாக்கலின் போது தமது முடிவை மாற்றிக் கொண்டு தம்முடைய ஆதரவை பக்காத்தான் ஹராப்பானுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

The post கேவியஸ் வலையில் சிக்கி விடாதீர்! -பக்காத்தானுக்கு மெக்லின் எச்சரிக்கை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!