International
பிரான்ஸ்

கைகள் கட்டப்பட்ட நிலையில் சென் நதியில் மிதந்து வந்த சடலம்!!

நேற்று வியாழக்கிழமை சென் நதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிந்தந்து வந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் Tuileries பூங்காவுக்கு அருகே உள்ள  la brigade fluviale மேம்பாலக்கடவையில் நபர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது தூண்டிலில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது. கடையாளம் காணமுடியாத நிலையில் அச்சடலம் உள்ளது எனவும், மின்கடத்தி கம்பியை பயன்படுத்தி அவரது கைகள் பின்னால் வைத்து கட்டப்பட்டிருந்தன எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர். சடலம் ஆணா பெண்ணா என்பது தொடர்பான விசாரணைகளை 1 ஆம் வட்டார காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!