International
மலேசியா

கோழி விலை திடீர்ன்னு ஏறிப் போச்சு!

ஜொகூர் பாரு,ஜன.11- சீனப் புத்தாண்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே எஞ்சியுள்ள நிலையில், சில அத்தியாவசப் பொருட்களின் விலையில் ஏற்றத்தைக் காண முடிகிறது.

குறிப்பாக, வழக்கமாக ஒரு கிலோவுக்கு 7 ரிங்கிட் 70 சென்னுக்கு விற்கப்படும் கோழி இறைச்சி தற்போது ஒரு கிலோவுக்கு 10 ரிங்கிட் விற்கப்படுகிறது.

பண்ணை விலை உயர்த்தப்பட்டு விட்டதால், சந்தையிலும் கோழி இறைச்சியின் விலையை உயர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லார்க்கின் சந்தையில் கோழி விற்கும் அப்துல்லா இட்ரிஸ் என்பவம் தெரிவித்துள்ளார். சில சமயங்களில் கோழிக்கான தீனியின் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், கோழி இறைச்சியின் விலையை ஏற்ற வேண்யிருக்கும் என்றார் அவர்.

சீனப் புத்தாண்டின்போது கோழி இறைச்சிக்கான தேவை அதிகம் இருக்காது என்ற போதிலும் அதன் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அப்துல்லா கூறினார்.

வியட்நாமில் H5N1 பறவை சளிக்காய்ச்சல் பாதிப்பால் கோழிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. எனவே, அதிகளவிலான கோழிகளுக்கு வியட்நாமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அதனால், இங்கு கோழி இறைச்சிக்கு பற்றாகுறை இல்லை என்றாலும், அதன் விலை ஏற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

The post கோழி விலை திடீர்ன்னு ஏறிப் போச்சு! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!