International
சினிமா

சர்க்கார் படத்திற்கு மட்டும் இப்படியா?.. குமுறும் பிரபல இயக்குனர்.!

சர்கார் பட விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பூதாகரமாய்
வெடித்துள்ள நிலையில், தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளி அன்று வெளியான சர்கார் படத்தில், ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி பெரும் சர்ச்சையை கிளப்பினர்.

இந்த விவகாரம் பூகம்பமாய் வெடித்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் சிலகாட்சிகளை நீக்கியது.

மேலும் அதிமுகவின் இந்த போராட்டம் சர்கார் படத்திற்கான ப்ரமோஷன் எனவும் கருத்துக்கள் வெளிவந்தது.

இந்நிலையில் தமிழ்ப்படம் 2 வின் இயக்குனர் சிஎஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் என் படத்திற்கு ஏன் இப்படி விளம்பரம் கொடுக்கவில்லை இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன், நாங்களும் சிறந்த முறையில் எங்களது முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இது முற்றிலும் பாகுபாடு சார்ந்த செயல் என சிஎஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

இந்த டிவிட்டிற்கு பலரும் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் படம் 2 படத்தில் ஓபிஎஸ் தியானம், பதவி பிரமானத்தின் போது அழுகை, சசிகலாவின் சபதம் ஆகியவற்றை கலாய்த்து சில காட்சிகளை வைத்திருந்தனர். இதை மனதில் கொண்டே சிஎஸ் அமுதன் அவ்வாறு கேட்டுள்ளார். மேலும், சர்காருக்கு தனது ஆதரவையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.


Post Views:
17

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!