International
சினிமா

உறுதியான ஆர்யா- சாயிஷா திருமணம்! மருமகனை பற்றி சாயிஷாவின் அம்மா…

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அவற்றிலும் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம்.

இவ்வாறு ப்ளே பாயாக சுற்றிவரும் ஆர்யாவிற்கு எப்போது என்று பல ரசிகர்களும் கேட்ட நிலையில், அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடும் படலத்தை தொடங்கினார். ஆனால் நிகழ்ச்சியின் i இறுதியில் எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனார்.

அதனைத் தொடர்ந்து அவர் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்தபோது அப்படத்தின் நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இதுகுறித்து ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ எந்த தகவலுக்கு வெளியிடவில்லை. இந்நிலையில் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நடிகர் ஆர்யா காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது திருமணத்தை உறுதி செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் வரும் மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சாயிஷாவின் அம்மா ஷஹீன் தனது ட்விட்டர் பக்கத்தில் சாயிஷா திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் எங்கள் வாழ்வின் அழகிய தருணம். ஆர்யாவை மருமகனாக எங்கள் குடும்பத்திற்கு வரும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆர்யா, சயீஷாவுக்கு எனது ஆசிர்வாதங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


Post Views:
13

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!