International
சினிமா

கரீனா கபூரின் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணுக்கு இவ்வளவு சம்பளமா?

இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் கரீனா கபூரும், இவரும் நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர், பெண் ஒருவரை நியமித்து உள்ளார். அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் வழங்கி வருகிறார்.

குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்காணல் வைத்து தேர்வு செய்துள்ளார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்து கொண்டு அந்த பெண்ணை தேர்வு செய்தனர்.

ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா எங்கு போனாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டுக்கு போனாலும் கூட உடன் போகவேண்டும் என்று கண்டிஷன் போடப்பட்டது.


Post Views:
20

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!