International
சினிமா

சந்தானத்தின் இப்போதைய நிலை என்ன தெரியுமா?

சென்ற பத்து ஆண்டுகளில், தமிழ் சினிமா கதாநாயகனுடன், சேர்ந்து நடித்து, படம் முழுக்க, சோலோவாக காமெடியில் கலக்கியவர், நடிகர் சந்தானம். பல படங்களில், கதாநாயகனின் நண்பனாகவே, வந்ததாலோ, என்னவோ, இவருக்கும் கதாநாயகனாக நடிக்க ஆசை வந்து விட்டது.

இனிமே இப்படித் தான் முதல், சமீபத்தில் வெளியாகி உள்ள தில்லுக்குத் துட்டு-2, படம் வரையிலும், கதாநாயகனாகவே நடித்துள்ளார். இதனால், காமெடியனாக தொடர்ந்து வந்த வாய்ப்புகளை தட்டிக் கழித்தார்.

தயாரிப்பாளர்களும், இப்போது அவரைக் கண்டு கொள்வதில்லை. தில்லுக்கு துட்டு-2 படம் முடிந்து, அடுத்து ஒரு படத்திலும் கதாநாயகானக நடிக்கப் போகிறார் சந்தானம்.

ஆனால், அவர் படங்கள், எதிர் பார்த்த அளவு ஓடவில்லை. நினைத்த அளவிற்கு, பெயரும் கிடைக்கவில்லை. இப்படியே போனால், சீக்கிரம் காணாமல் போய் விடுவார், என்று, சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நல்ல காமெடி நடிகர், அவராக, அவருக்கு வாய்ப்புகளை எல்லாம் கெடுத்துக் கொண்டார், என்றும் பேசிக் கொள்கிறார்கள். இப்படித் தான் வடிவேலுவும் காணாமல் போனார்.

நாகேஷ் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த போது, அவரும் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். “சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, நவக்கிரகம், எதற்காக அழுதான்? என அவர் கதாநாயகனாக நடித்த படங்களிலும், அவரது பாத்திரம் அவருக்கேற்றாற் போல் இருந்தது. அதனால், அந்தப் படங்கள் வெற்றி அடைந்தன.

ஆனாலும், அவர் தொடர்ந்து காமெடியனாக நடித்து, வயதாகிய பின்னரும், நடித்துக் கொண்டிருந்தார். அந்த புத்திசாலித்தை, சந்தானம் போன்றவர்கள் பின்பற்றினால், இன்னும் சில காலம் சினிமாவில் தாக்குப் பிடிப்பார்கள். இல்லா விட்டால், காணமாமல் போய் விடுவார்கள். மக்களும் அவர்களை மறந்து விடுவார்கள்.


Post Views:
15

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!