International
சினிமா

சுர்ஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது.. ஆத்மா சாந்தியடையட்டும்! நடிகர் ரஜினிகாந்த்

குழந்தை சுர்ஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் உயிரிழந்தான். குழந்தையை மீட்க நடந்த 80 மணிநேர போராட்டம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.

உயிரிழந்த சுர்ஜித்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது. அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என தெரிவித்துள்ளார்.


Post Views:
3

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!