International
சினிமா

ஜெயலலிதாவாக மாறும் நயன்தாரா?

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில், நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் திரைக்கு வந்த படம் சண்டக்கோழி 2.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். திரையுலக பிரபலன்களான வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கபாலி விஷ்வா, சண்முகராஜன் மற்றும் தென்னவன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 4 நாட்களில் தமிழ் நாடு முழுவதும் ரூ.16.9 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாக கூறுகின்றனர். அதோடு, இப்படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்கு நயன்தாரா அல்லது வித்யா பாலன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் திவாகரன் கூறுகையில், அம்மாவின் வாழ்க்கை வரலாறு தனித்துவம் கொண்ட இயக்குநர் எனது நண்பர் திரு.லிங்குசாமி அவர்கள் படமாக்கயுள்ளார்.


Post Views:
14

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!