International
சினிமா

ஜெயலலிதாவின் வாழ்கை படம்! வித்தியாசமான பர்ஸ்ட்லுக் போஸ்டரால் மிரண்ட ரசிகர்கள்!

பல படங்களில் நடித்து திரையுலகத்தின் மூலம் மக்களிடம் அறிமுகமானவர் ஜெயலலிதா. பின்னர் தமிழக அரசியலில் களமிறங்கிய அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து, தமிழகத்தின் முதல்வரானார்.

இந்நிலையில் மறைந்த இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.தமிழகத்தின் முதலமைச்சராகவும், இரும்பு பெண்ணாகவும் திகழ்ந்த இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி போன்ற பல இயக்குனர்களும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மேலும் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியதர்ஷினி ‘த அயர்ன் லேடி’ என்று பெயரிடப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அறிவித்தார்.மேலும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என பெயரிடப்பட்ட படத்தில், ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா ரணாவத் உறுதி செய்யப்பட்டார். மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற தலைப்பில் இணைய தொடராகவும் ஜெயலலிதா வாழ்க்கை படம் உருவாகி வருகிறது.

இதனை தொடர்ந்து தெலுங்கு யுவ சக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக தயாரித்து இயக்குகிறார். சசிலதா என பெயரிடப்பட்ட இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்‘ வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் ஜெயலலிதா, சசிகலா இருவரின் படங்களும் பாதியாக இடம்பெற்றிருந்தது.


Post Views:
9

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!