International
சினிமா

தனிஒருவன் இரண்டாம் பாகம்?

தமிழ் சினிமாவின் ரீமேக் இயக்குநர் என பெயரெடுத்தவர் இயக்குநர் மோகன் ராஜா. ஆனால் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கிய தனிஒருவன் படத்தின் மூலம் தனி அடையாளத்தை பெற்றார். அதன் பிறகு இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் மோகன் ராஜாவை முன்னனி இயக்குநர்களில் ஒருவராக உயர்த்தியது.

இந்நிலையில் வேலைக்காரன் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருந்த இயக்குநர் மோகன் ராஜா, சமீபத்தில் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தற்போது இந்த படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி இறந்து விடுவதால் இரண்டாம் பாகத்தில் ஜெயம் ரவியே ஹீரோ வில்லன் என இரட்டை கதாபாத்திங்களில் நடிக்க உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் நாயகியாக சமந்தா நடிக்க அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதனை பற்றி படக்குழுவினர் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.


Post Views:
4

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!