Sat. Jan 16th, 2021


தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் – செல்வராகவன் – யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

நானே வருவேன்

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Related Tags :


share

By Editor

error: Alert: Content is protected !!