International
சினிமா

தர்ஷன் காதலுக்கு எண்டு கார்டு போட்ட சனம் ஷெட்டி..?!

பிக்பாஸ் 3வது சீசனில் பல பேருக்கு பிடித்த மற்றும் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தர்ஷன். இவர் தனது விளையாட்டில் சரியாக இருந்தார், மேலும் டைட்டில் பெறவில்லை என்னும் வருத்தம் பலரும் வருத்தம் தெரிவித்தார்கள்.

இதை தொடர்ந்து அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து தர்ஷன் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தான் அவரது காதலி சனம் ஷெட்டி தனது இன்ஸ்டா போஸ்டில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் அதிகமாக கேட்பதாக தோன்றவில்லை, ஆனால் தவறான நபரிடம் கேட்டுவிட்டேன் என்று இப்பொது புரிகிறது.

யாராவது விலகி செல்ல நினைத்தால் விட்டுவிடுங்கள், காலம் அவர்களுக்கு பதில் சொல்லும் என்று பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், தர்ஷனுக்கும், சனம் ஷெட்டிக்கும் உண்டான காதல் முறிந்து விட்டதா.? என்ற குழப்பி இருக்கிறார்கள்.


Post Views:
6

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!