International
சினிமா

நடிகர் விஜயின் தம்பிக்கு இப்படி ஒரு திறமையா?

தமிழ் சினிமாவில் அதிகம் சோபிக்காத ஒரு கதாநாயகன் விக்ராந்த், சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், நடிகர் விஜய்யின் தம்பி என்ற அறிமுகத்தோடு சினிமாவில் கால் பதித்தாலும் தன்னுடைய இடத்திற்காக இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார். சில திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தரமான கதாபாத்திரங்களில் நடித்தாலும் இன்னும் தன்னுடைய இடத்திற்கு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அனைவருக்கும் அறிமுகமான நடிகராக தான் இருக்கிறார். ஏனெனில் தமிழ் நடிகர்களின் நட்சத்திர கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்கள் என்றால் அது நடிகர் விஷ்ணு விஷாலும், விகராந்தும் தான் அனைவரும் அறிவார்கள். ஏனெனில் அவர்கள் இருவருமே தேர்ந்தெடுத்த தொழில்முறை கிரிக்கெட் வீரராகவே விளையாடுவார்கள். அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் தொழில்முறை கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்பது தான் சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

தமிழக டிவிசன் அளவிலான போட்டியில் விக்னேஸ்வரா CC என்ற அணி சார்பாக களம் இறங்கி 92 பந்துகளில் 107 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். அந்த ரன்களில் இரண்டு சிக்சர்களும், 10 பவுண்டரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிக்காக ஆடிய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில், சதமடித்து தன்னுடைய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

இதுகுறித்து கிரிக்கெட் பயிற்சி நிறுவனம் ட்விட்டரில் பதிவு செய்ய, அதற்கு நடிகர், நடிகைகள் மத்தியிலும், விளையாட்டு வீரர்கள் மத்தியிலும் அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அவர் அணியின் ஸ்கோர் கார்டுடன் அவருடைய முழு படத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த பதிவை குறிப்பிட்டு தமிழக வீரர் ரவிச்சந்தரன் அஷ்வின், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, நடிகர்கள் விஷ்ணு, நடிகை சிரேயா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.


Post Views:
4

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!