International
சினிமா

நடிகைகளின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பிரபல நடிகர்! தப்பித்த திரிஷா, நயன்தாரா!

தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா நடித்து அண்மைவில் வந்த 96 படம் திரிஷாவுக்கு பெரும் புகழை பெற்றுத்தந்துள்ளது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

96 படம் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது. அதுவும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்தது இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்றது.

இப்படத்தின் 100 வது நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார். அதில் மேடையில் 96 படக்குழுவை வாழ்த்தினார். அப்போது அவர் நகைச்சுவையாக பல நடிகைகளை தன் படங்களில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன்.

அதில் தப்பித்துக்கொண்டது திரிஷாவும், நயன்தாராவும் தான் என மேடையில் நகைச்சுவையாக கூறினார். மேலும் நடிகைகளின் நடிப்பு திறனையும் பாராட்டினார். பார்த்திபன் பேசிய நகைச்சுவை பேச்சு அனைவரையும் சிரிக்கவைத்தது.


Post Views:
9

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!