International
சினிமா

நயன்தாராவிற்கு மகளிர் தினத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இவ்வாறு பல ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்கும் நயன்தாரா நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்ததில் இருந்து அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். மேலும் இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து அடிக்கடி ஊர் சுற்றி வருகின்றனர். மேலும் அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் மகளிர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும் நயன்தாராவிற்கு வித்தியாசமான, விதவிதமான பூக்களால் ஆன பூச்செண்டுகளை பரிசாக கொடுத்துள்ளார். “நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே” என குறிப்பிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post Views:
6

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!