International
சினிமா

பிக் பாஸை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் மட்டுமே சுவாரஷ்யமான இருந்து வருகிறது. மற்ற நாட்களில் இதுவரை போராகவே சென்று வருகிறது. ஒவ்வொருவரமும் ஒட்டு அடிப்படையில் ஒவ்வொருவரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

bigg bossஇதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து மமதி, அனந்த் வைத்தியநாதன் மற்றும் நித்யா என மூன்று நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த வார நாமினேஷனில் பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ரம்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்,

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி வழக்கம் போல பொன்னம்பலம் அவர்கள் அதிகமான ஓட்டுகள் பெற்று சேப்பாகி இருப்பதாகவும் ரம்யா தான் மிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ரம்யாவுக்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா தத்தா இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இறுதியில் வெளியேறப்போவது ரம்யாவா? ஐஸ்வர்யாவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கலாம்.


Post Views:
19

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!