International
சினிமா

ரூ.80 கோடி சொத்துக்களை, கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை!

கடந்த 1970களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக காஞ்சனா இருந்துள்ளார். அவருக்கு தற்போது 79 வயதாகிறது. சமீபத்தில் தெலுங்கில் இவர் நடித்து வெளியான படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இந்நிலையில் தனது வாழ்க்கை குறித்து காஞ்சனா கூறியவை, நான் விமானப் பணிப்பெண்ணாக இருந்தேன். இயக்குநர் ஸ்ரீதர் என்னைப் பார்த்து ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் அறிமுகம் செய்தர்.

எனது உண்மையான பெயர் வசுந்தரா தேவி. வைஜயந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்து வந்தார். எனவே என் பெயரை காஞ்சனா என்று ஸ்ரீதர் மாற்றிவைத்தார். 46 ஆண்டுகள் தொடந்து நடித்தேன்.

நான் சம்பாதித்த பணத்தில், சென்னை தி.நகரில் சொத்துகள் வாங்கிப் போட்டேன். ஆனால் எனது உறவினர்கள் சொத்துக்களை ஏமாற்றிவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துகளை மீட்டுள்ளேன்.

இதன் பிறகு, திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்தேன். திருமணம் செய்து கொள்ளாமலே என் வாழ்க்கையை கழித்து உள்ளேன். தற்போது என் தங்கையின் பராமரிப்பில் இருக்கிறேன் என்று கூறினார்.


Post Views:
14

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!