International
சினிமா

லேட்டாக வந்த சீரியல் நடிகர்.. மனைவி விபரீத முடிவு..!

ஆந்திராவில் பிரபல தொலைக்காட்சி நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சீரியல்களில் நடித்தும் பிரபலமடைந்தவர் நடிகர் மதுபிரகாஷ். இவர் பாகுபலி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதி என்ற ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இவருக்கும், இவரது மனைவிக்குமிடையே சில தினங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இரவு அதிக நேரத்திற்கு பிறகு மதுபிரகாஷ் வீட்டிற்கு வருவது பாரதிக்கு அறவே ஒத்துவரவில்லை. இதனால், பாரதிக்கு பிரகாஷ் சினிமா துறையில் ஈடுபடுவது பிடிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று காலை மதுபிரகாஷ் பாரதியிடம் ஜிம் செல்வதாக பொய் சொல்லிவிட்டு சீரியலில் நடிக்க சென்றிருந்தார். இதனையறிந்த பாரதி கடும் கோபமடைந்தார். பிரகாஷுக்கு கால் செய்து தற்கொலை செய்து கொள்வதாக பாரதி மிரட்டியுள்ளார். மது பிரகாஷ் இதனை கண்டுகொள்ளாமல் விட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, வழக்கம் போல இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
5

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!