International
சினிமா

300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3 திரைப்படம்

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான தபாங் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சல்மான் கானின் அதிதீவிர ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் பரபரப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய இப்படத்தின் போஸ்டர்கள், ரசிகர்கள் எந்த அளவுக்கு இப்படம் குறித்து அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிய வைத்தது.
தற்போது வெளியாகியிருக்கும் தபாங் 3 படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கறது என்றால் மிகையாகாது. போக்கிரி தமிழ்ப் படத்தின் இந்திப் பதிப்பான வாண்டட் படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த சல்மான் கானும் பிரபுதேவாவும் இப்போது தபாங் 3 படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்திருக்கிறது. வாண்ட்டட் படத்தைக் காட்டிலும் பத்து மடங்கு சிறப்பான திரைவிருந்தாக தபாங் 3 அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதற்கு வலு சேர்ப்பதுபோல் படத்தில் சல்புல் பாண்டே வேடம் ஏற்றிருக்கும் சல்மான் கானின் அட்டகாசமான தோற்றத்துடன் வெளியான போஸ்டரில் உள்ள டேக்லைனில் ஜல்லிக்கட்டுக் காளை தயார் என்ற வாசகமும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் புகழ் உயரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தபாங் 3 படத்தின் மோஷன் போஸ்டரில் உள்ள காட்சிகளும் இசையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தபாங் 3 படத்தின் அனைத்து தமிழ்நாடு விநியோக உரிமைகளைக் கைப்பற்றியிருக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் கோட்டபாடி ராஜேஷ் கூறியதாவது….

“பர்ஸ்ட் லுக் போஸ்டரையே ஒரு பெரிய திருவிழாபோல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் படத்துக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. சமுக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரில் தொடங்கி படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன். இப்படத்தின் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. தபாங் 3 வெளியாகும் 2019 டிசம்பர் 20ஆம் தேதி எல்லோருக்கும் இன்னொரு தீபாவளியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
மேலும் தபாங் 3 படம் இதுவரை நடந்திராத மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்யக் காத்திருக்கிறது. அதாவது தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இதற்கு முன் சல்மான் கானின் எந்தப் படமும் இந்த அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.

நகைச்சுவை, ஆக்ஷன் சென்ட்டிமெண்ட் மற்றும் வெகுஜன ரசனைக்கேற்ற அனைத்து அம்சங்களும் கொண்ட தபாங் 3 படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றி பெற்று புதிய சாதனைகள் படைக்கும் என்று திடமாக நம்புகிறேன்” என்றார் கோட்டப்பாடி ராஜேஷ்.
திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், வெளியீடு ஆகியவற்றில் ஈடுபட்டு தனித்தன்மையுடன் செயல்பட்டுவரும், கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபய் தியோல் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ஹீரோ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படமும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. ஆக தமிழக ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.

The post 300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3 திரைப்படம் appeared first on VTV 24×7.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!