International
ஆண்டு பலன் - 2018

சிம்மம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

சிம்மம் ராசியினருக்கு 2018ம் வருடம் தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது என்றே கூறலாம். வருட ஆரம்பத்தை விட பிற்பகுதியில் கிரகம் நிலைகள் நன்றாக இருப்பதால் நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் எதிர்கால திட்டங்களை தீட்டி வெற்றிகரமாக நிறைவேற்றும் நேரம் வந்து விட்டது. இதுவரை இனம் புரியாத பயம், அச்சம், குழப்பம் என்று இருந்தவர்கள் தன்னம்பிக்கையும், தைரியம் பிறக்கும். மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் தவிர மற்ற கிரகம் நல்ல நிலையில் இருக்கும் பொழுது அடிப்படைகளை அமைத்து கொள்ளுங்கள். தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றம் அடைவதற்க்கான வழிகளை கண்டு அறிந்து ஈடுபடுங்கள்.

பொதுவான பலன்கள்

ராகு பகவான் பன்னிரண்டாம்  இடத்தில் இருக்கும் பொழுது அதுவும் அவருக்கு பிடித்தமான வீட்டில் இருப்பது நல்ல பலனை தரும். கேது பகவான் ஆறாம் இடத்தில் இருந்து நல்ல லாபங்கள் மற்றும் எதிர் பாராத தனத்தை  தருவார். இதுவரை சனி ராசியின் மீது பார்வை இருந்து நற்பெயரை மற்றும் எது செய்தாலும் மற்றவர்களுக்கு திருப்பதி அளிக்காத விதமாக இருந்தது. அந்த நிலை இப்பொழுது மாரி நற்பெயர்  கிடைக்கும்.

இப்பொழுது சனி பகவான் ஐந்தாம் இடத்தில், ராகு ஆறாம் இடத்தில், கேது பன்னிரண்டாம் இடத்தில் இருக்கின்றார்கள். இது போல் பதினெட்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த அமைப்பு வருவதால் சிம்மம் ராசியினர் வேலை, தொழில், வியாபாரம், ஜீவன அமைப்பு சிறப்பாக இருக்கும் என்றே கூறலாம். கடன் தொல்லை இருந்து விடுதலை மற்றும் அது வாங்க நேர்ந்தாலும் அதனை கட்டி முடிக்கும் அளவிற்கு பணவரவு சீராக இருக்கும்.

தீடிர் புகழ், செல்வம் சேர்க்கை, தனவரவு என்று இருப்பீர்கள். கலை துறை, மீடியா, தொலைக்காட்சி, ஊடங்களிலும், எழுத்து துறை, பத்திரிகை போன்றவற்றில் சாதனை மற்றும் சாதிக்க முடியும்.வெளியூர் பயணங்கள், ஆன்மிகம் மற்றும் இறை வழிபாடு சிறப்பாக அமையும். குலதெய்வ வழிபாடு செய்து செய்யும் காரியங்கள் வெற்றியே பெரும். வேற்று மதம் சார்ந்தவர்கள் உதவி புரிவார்கள். குறிப்பாக முஸ்லீம் நாடுகள் வேலை வாய்ப்பு வரும்.

ஐந்தாம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் அவர்களின் கவனித்து நல்ல வழி செய்யுங்கள். படிப்பில் கவனம் சிதறும் , நவீன கருவிகள், கணினி என்று இருப்பார்கள். காதல், கத்திரிக்காய்,   என்று மனம் சிதறுவதால் பிள்ளைகளின் மீது கண்காணிப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள்

சிம்மம் ராசியில் பெரும்பாலும் இரண்டரை வருடம் அர்த்தாஷ்டம சனி பாதிப்பால் சரியான வேலை அமையாமல், நிலையான வருமானம் இல்லாமல், வேலை இருந்து குறைந்த ஊதியத்தில் இருந்தவர்கள்  இப்பொழுது அந்த நிலை மாறும். இந்த புத்தாண்டு ஜீவன அமைப்புகள் நன்றாக இருப்பதால் சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். வேலை, தொழில், புதிதாக தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.

அரசு, தனியார் துறை பணிபுரிபவர்கள் , மீடியா, கலைத்துறை, எழுத்து துறை, பத்திரிகை போன்றவற்றில் இதர வருமானம் வரக்கூடும். ஒரு சிலர்க்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு, வேலை சுமை குறையும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

சொந்த தொழில், வியாபாரம், தொழிலை விரிவாக்கம் செய்பவர்கள் நல்ல பொருளாதாரம் மேம்படும். பன்னிரண்டாம் இடத்து ராகு உங்களுக்கு செலவுகள் செய்தால் ஆறாம் இடத்தில் இருக்கும் கேது அதனை அடைக்க போதிய வருமானம் கொடுப்பார். செலவுகளை பொருட்கள் வாங்குவது, விரிவாக்கம் செய்வது, பழுது அடைந்த பொருட்கள், இயந்திரம் மாற்றுவது என்று பயன் படுத்திக்கொள்ளுங்கள். கூட்டு தொழில் இருந்த கருத்து வேறுபாடு, பணம் பாக்கி எல்லாம்  தீர்வுக்கு வந்து விடும்.

பெண்கள்

சிம்மம் ராசியினருக்கு கெட்டி மேளம்   கொட்டுகின்ற நேரம் வந்து  விட்டது. பன்னிரண்டாம் இடத்து ராகு செலவுகள் செய்ய வைப்பார் அதனால் நீங்கள் அதனை சுப செலவாக மாற்றி கொள்ள வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்கள், வீடு, வாகனம் வாங்குவது, சுப நிகழிச்சி போன்றவற்றிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.ஆடை, ஆபரணம், விலை உயர்ந்த நகை வாங்கி மகிழ்வீர்கள்.

நீண்ட நாட்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு அழகான குழந்தை செல்வம் கிட்டும். முதல் திருமணம் கோணலாக ஆகி விட்டது என்று இருந்தவர்கள், இரண்டாவது திருமணம் நன்றாக அமைந்து விடும்.

மாணவ / மாணவிகள்

சிம்மம் ராசி பிறந்த பிள்ளைகள் சோம்பல், உடல் நலிவும் ஏற்படுவதால் பெற்றவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். சிம்மம் ராசி பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும் உற்சாகம் செய்தால் நன்றாக படிப்பார்கள். ஜூலை நான்காம் தேதி முதல் டிசம்பர் வரை மாணவ மாணவியர்  படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். சுறுசுறுப்புடன், போட்டி, விளையாட்டு கலந்து கொண்டு பரிசும் பெறுவார்கள். இளம் பிள்ளைகள் நல்ல தேர்வு மதிப்பெண் பெற்று நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வரக்கூடும். மேலும் உங்கள் நேரத்தை வீணாக்காமல் ஏதேனும் திறமை சார்ந்த படிப்புகள் வளர்த்து கொள்வது முன்னேற்றத்தை கொடுக்கும்.

உடல் நிலை

உடல் நலம் சீராக இருக்க தினமும் உடற்பயற்சி செய்வது நன்மை அளிக்கும். வியர்வை வரும் வரை நடைபெயர்ச்சி அல்லது ஏதேனும் வேலை செய்தால் உடல் நலக்குறைவு ஏற்படாது. ஏதேனும் சிறியதாக அடிவயிறு , உறுப்பு உபாதைகள், உணவுக்குழாய் பிரச்சனை என்றாலும் மருத்துவரை அணுகுங்கள். ஒரு சிலர்க்கு தேக நிலையில் குறைபாடு  மற்றும் அலர்ஜி தோன்றி மறையும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!