International
சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம்! – பரிசில் ஐவர் கைது!!

சுவிட்சர்லாந்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட ஐந்து கொள்ளையர்கள் பரிசில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் ஒரு வருடத்தின் முன்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஓகஸ்ட் 15 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. ஓய்வூதியம் பெற்றுவந்த மூத்த தம்பதியினர் இருவரை தாக்கி, அவர்களிடம் இருந்த மொத்த பணத்தினையும் அள்ளிக்கொண்டு பரிசுக்கு தப்பி வந்த கொள்ளையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கொள்ளையின் போது அவர்கள் முகமூடி அணிந்து வீட்டுக்குள் நுழைந்ததாகவும், 68 வயதுடைய நபர் ஒருவரை மோசமாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 24 -31 வயதுடையவர்கள் எனவும், தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!