International
இந்தியா

”அனில் அம்பானி”க்கு உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.!!

இந்தியாவில் உள்ள தொழிலதிபர்களில் முக்கியமானவரான அனில் அம்பானி மீது தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளி என உறுதிசெய்து ஒரு அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
நஷ்டத்தில் திணறி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அனில் அம்பானி அவர்கள், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாயை வழங்கவில்லை, அந்நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது.
பின் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற மூலம் தீர்வு காணப்பட்டு 550 கோடி ரூபாய் பெற்று கொள்வதாக எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது. அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் அந்தத் தொகையை, எரிக்ஸன் நிறுவனத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை. இதனால், அனில் அம்பானி மீது உச்ச நீதிமன்றத்தை முறையீடு செய்தது எரிக்ஸன் நிறுவனம். இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் நிலுவை தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த முறையும் அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை. அதாவது பணத்தை எரிக்ஸன் நிறுவனத்துக்கு தரவில்லை. இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 12ம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தில், அனில் அம்பானி நேரில் ஆஜராகி, 118 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,
* அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது.* மேலும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களையும் குற்றவாளி என அறிவித்துள்ளது.* வரும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை செலுத்த வேண்டும்,* தவறினால் 3 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும்.* மேலும், அனில் அம்பானி மற்றும் அந்த நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களுக்கும் தலா 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.* இந்த அபராத தொகையை ஒரு மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!