International
இந்தியா

ஆண் வேடமிட்டு சபரிமலைக்கு சென்ற பெண்கள்.! அலறி அடித்து ஓட்டம்.!!

கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.
கேரளா மாநிலத்தில் இரண்டு பெண்கள் கடந்த வாரம் காவல்துறை பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்துக்குள் நுழைந்து 18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த கலவரத்தில் பாரதிய ஜனதா கட்சியினரும் மார்க்ஸிஸ்ட் கட்சித் தொண்டர்களும் மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் சாமிலா சஜீஷ் ஆகிய இரு இளம் பெண்களும், 6 ஆண்களும் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை செல்ல பம்பை வந்த போது அங்கிருந்த ஐயப்ப பக்தர்கள், மற்றும் இந்து அமைப்பினர் அவர்களை திருப்பி அனுப்பினர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்தியதற்காக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதில் பெரும் பார்ப்பரப்பு ஏற்பட்டது. பின் போலீசாரே அந்த இளம் பெண்களை திருப்பி அனுப்பினார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!