International
இந்தியா

ஆழ்துளை கிணற்றில் தவிக்கும் குழந்தை சுஜித்! மோடியிடம் இருந்து பறந்த அவசர செய்தி..!!!

குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், பிரிட்டோ ஆரோக்கியராஜ் – கலா மேரியின் 2 வயது குழந்தை சுஜித் வில்சன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
அந்தக் குழந்தையை மீட்கும் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவன் சுஜித் ஆபத்தின்றி மீண்டு வருவதே தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அங்கேயே தங்கியிருந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அவர்களிடம் முதல்வர் பழனிசாமி தொடர்பு கொன்டு தகவல்களைக் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்களன்று சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை மேற்பார்வை செய்கிறார்.
இந்நிலையில் குழந்தை சுஜித்தை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது..
தைரியமான சிறுவன் சுஜித்துடன் எனது பிரார்த்தனைகள் உள்ளது. சுஜித்தை மீட்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பேசினேன். சுஜித்தை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் தம் பதிவிட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!