International
இந்தியா

கோஹ்லியே நேரில் சென்று வணங்கிய மூதாட்டி..

உலகக் கோப்பை தொடரில் நேற்று இந்தியா-வங்கதேச மோதிய போட்டியின் போது மைதானத்திலிருந்து 87 வயது மூதாட்டி ஒருவர் சமூக வலைதளங்கள், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.
சாருலதா படேல் என்னும் அந்த மூதாட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை. இதனால் இங்கிலாந்தின் எட்க்பாஸ்டனில் நேற்று நடந்த இந்திய – வங்கதேச ஆட்டத்தை காணச் சென்றுள்ளார்
இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும், வீல் சேரில் வந்திருந்தாலும், கையில் இந்தியக் கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டாடி கொண்டிருந்தபோது கேமராவின் கண்ணில்பட சிறிதுநேரத்திலேயே வைரலாகினார் சாருலதா பாட்டி.

Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She’s 87 and probably one of the most passionate & dedicated fans I’ve ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. 🙏🏼😇 pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019

இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சாருலதா பாட்டியைச் சந்தித்து அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவரிடம் ஆசியும் வாங்கினார். இதேபோல் ரோகித் சர்மாவும் அவரிடம் ஆசி வாங்கினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட கோஹ்லி, போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சாருலதா படேல் ஜி -க்கு. அவருக்கு 87 வயது. நான் பார்த்த மிக ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களில் ஒருவர் சாருலதா பாட்டி.

வயது வெறும் எண் மட்டுமே. ஆர்வம் தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேயுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!