International
இந்தியா

சந்தனத்தால் அடிக்கும் மக்களை கோடீஸ்வரனாக்கும் தெய்வம்…

இந்தியாவில் சைவ மதத்தினரின் முதன்மைக் கடவுளாக திகழ்பவர் சிவன். தென்னகத் தலைவன், தமிழ் குடிமகன்களின் கடவுள் என பல்வேறு சிறப்புகளை சிவன் பெற்றுள்ளார். சைவர்களின் நம்பிக்கைப் படி, பேரூழியில் அனைத்தையும் அழிப்பவ சிவனாவார். சிவனின் இடப்புறத்திலிருந்து திருமாலும், வலது புறத்திலிருந்து பிரம்மனும் தோன்றினார்கள் என்று வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்றும் புராணங்கள் வாயிலாக தெரியவருகிறது.
வரலாற்றில் சிவன்
தமிழகர்களின் ஆதியான சிந்து சமவெளி நாகரி காலகட்டத்தில் கண்டறியப்பட்ட தியானத்திலுள்ள பசுபதி முத்திரையே சிவவழிபாட்டின் ஆரம்பமாக உள்ளது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதுபோல் உள்ள அந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அக்னி, வாயு, இந்திரன், பிரஜாபதி போன்ற வேதக்கடவுள்களே பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகவும் சங்ககால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
இந்தியாவில் சிவன் வழிபாடு
இந்தியாவில் சிவன் வழிபாடு பெரும்பாலும் லிங்க வடிவிலேயே உள்ளன. வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். சில பகுதிகளில் மட்டுமே சிவனின் உருவ வழிபாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பல தோற்றங்களைக் கொண்ட சிவன் வேண்டியதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஆதிகாலம் முதல் பரவலாக நிலவிவருகிறது.
அடித்துக் கேட்டால் வேண்டியதை கொடுக்கும் லிங்கம்
கோவில் வழிபாடுகளில் கடவுளுக்கு ஆடை, அன்னதானம், கிடாவெட்டு என பல்வேறு முறைகளில் படையல் வைத்து வழிபட்டால் வேண்டியது நிறைவேறும் என்பது தொன்நம்பிக்கை. இதைத்தான் நாம் பெரும்பாலான கோவில்களில் பார்த்திருப்போம். ஆனால், கோவை அருகே உள்ள சிவன் கோவிலில் சந்தனக் கட்டையால் அடித்துக் கேட்டால் வேண்டியது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இயற்கைசூழ்ந்த வனக் கோவில்
பழனி – கோவை நெடுஞ்சாலையில் உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமூர்த்தி அணை. இந்த அணையை ஒட்டி அமையப்பெற்றுள்ளதுதான் அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில். மலையடிவாரத்தில் திருமூர்த்தி கோவில் என புகழ் வாய்ந்த கோவிலாக இது உள்ளது.
தல அமைப்பு
திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ள இந்த சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத நீரோடை ஓடுகிறது. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்க அருவி என அழைக்கப்படும் அருவியொன்றும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திலுக்கிறது.
கோவில் வரலாறு
தென்தமிழகத்தில் மிகவும் பிரசிதிபெற்றது திருமூர்த்தி மலை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளது இங்குள்ள அணையும், அமணலிங்கேஷ்வரர் கோவிலுமே. கைலாயத்தில் நடைபெற்ற இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே பஞ்சலிங்கம் என கூறப்படுகிறது. கைலாயக் காட்சியை இறைவன் திருமூர்த்தி மலையிலும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக காட்சியளிக்கின்றனர்.
என்ன சிறப்புன்னு தெரியுமா ?
அமணலிங்கேஷ்வரர் கோவிலில் உள்ள மும்மூர்த்திகளை வழிபடும் பக்தர்கள் சந்தனத்தை வாங்கி கடவுள் உருவச் சிலையின் மீது எறிந்து விசித்திரமாக வழிபடுகின்றனர். அவ்வாறு சந்தனத்தை தூக்கி எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நினைத்த காரியம் உடனே நிறைவேறும் என்ற தொன்நம்பிக்கி இங்கு வரும் பக்தர்களது மனதில் நிலவிவருகிறது.
மகரிஷி மனைவி வழிபட்ட பஞ்ச லிங்கம்
திருமூர்த்தி கோவில் மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. இங்குதான் அத்திரி மகரிஷியும் அவரது மனைவியும் பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்ததாக தொன்நம்பிக்கை உள்ளது. இன்றளவும் கூடு அவர்கள் இந்த பஞ்ச லிங்கத்தை அன்றாடம் வழிபடுவதாக கூறி திகைப்படையச் செய்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். பஞ்ச லிங்கத்தை அடுத்து சப்த கன்னியருக்கும் தனி சன்னதி உள்ளது.
குழந்தை பாக்கியம் அருளும் கன்னிமார்கள்
நீண்ட ஆண்டுகள் குழந்தை இன்றி தவிக்கும் தம்பதியினர் இக்கோவிலை ஒட்டியுள்ள நீரோடையில் நீராடிவிட்டு சப்த கன்னிமார்களையும், இத்தலத்தில் உள்ள விநாயகரை வழிபட்டு வரடிக்கல்லை பிடித்தும் வேண்டினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். மேலும், திருமணம், வேலை, மனநிம்மதி உள்ளிட்டவையும் நல்லமுறையில் நடக்கும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!