International
இந்தியா

சுஜித் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த தமிழக முதல்வர்..!

மறைந்த குழந்தை சுஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியுள்ளார்.
திருச்சியில் மறைந்த 2 வயது குழந்தை சுஜித் வீட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், குழந்தை சுஜித்தை மீட்க அரசு சார்பில் எல்லா வகையிலும் விடாமுயற்சி செய்தோம்; பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை.
சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 10 லட்சமும், அதிமுக சார்பில் ரூ. 10 லட்சமும் வழங்கப்படும் எனத்தெரிவித்தார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த முதல்வர், அரசை குறை கூறுவதையை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார். எல்லாம் தெரிந்த விஞ்ஞானி போல் பேசும், மு க ஸ்டாலின் 2009 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் போது ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!